அமெரிக்க வீசா அனுமதிகளை வழங்குவது உலக முழுவதும் தாமதமாகியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்கள வெளிவிவகார பிரிவு அலுவலகத்தின்
வீசா கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வீசா கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 8 ஆம் திகதிக்கு பின்னர், அனுமதி வழங்கப்பட்ட குடியேற்றம் அல்லாது விண்ணப்பதாரிகளின் வீசாகளை அமெரிக்க தூதரகங்களினால் இதுவரை அச்சிட முடியவில்லை.
அத்துடன் கடந்த 9 ஆம் திகதிக்கு பின்னர் இணையத்தளம் வழியாக வீசாவுக்கு விண்ணப்பித்தவர்களும் இதுவரை நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவில்லை.
மேலதிக விபரங்களை 011 7703703 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என கொழும்பில் அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
வார நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment