February 9, 2015

முஸ்லிம் காங்கிரஸின் அழைப்பை பரிசீலிக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு!

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அழைப்பு குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் இதனை உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மாதிரி தேசிய அரசாங்கத்தை உருவாக்க முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.
இதன்படி அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொள்ள அவர் விருப்பம் வெளியிட்டிருந்தார்.
இந்த அழைப்பை வரவேற்றுள்ள அரியநேந்திரன், எனினும் இதனை அவர்கள் முதலைமைச்சர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு முன்னதாகவே வெளியிட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இது குறித்து கட்சியின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி தீர்மானிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment