February 9, 2015

ஆயுத களஞ்சியத்தை நடத்திய நிறுவனத்தின் இலாபம் யாருடைய பைகளுக்குள் சென்றது?

காலி கடற்படை முகாமில் கண்டுப்பிடிக்கப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை நடத்தி வந்த எவண் காட் மெரிடைம்ஸ் சர்வீஸ் நிறுவனத்தின் வருடாந்த செலவு 480 கோடி ரூபா என தெரியவந்துள்ளது.

சர்வதேச கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்காக வருடாந்தம் இந்த செலவு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு முன்னர் பாதுகாப்பு வழங்கிய இலங்கை கடற்படை 2011 ஆம் ஆண்டு வரை 30 கோடி டொலர்களை சம்பாதித்திருந்தது. இது இலங்கை நாணய பெறுமதியில் 3 ஆயிரத்து 900 கோடி ரூபாவாகும்.

இதனடிப்படையில் இலங்கை கடற்படைக்கு கிடைத்து வந்த 3 ஆயிரத்து 900 கோடி ரூபா வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எவண் காட் நிறுவனம் வருடாந்தம் 3 ஆயிரத்து 400 கோடி ரூபாவை இலாபமாக பெற்றுள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வளவு பெருந்தொகை பணம் யாருடை பைகளுக்குள் சென்றது என்ற பாரதூரமான கேள்வி எழுந்துள்ளது.

எவண் காட் நிறுவனத்திற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே இந்த பாதுகாப்பு பணியை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment