தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சுமந்திரன் அமைச்சு பொறுப்பினை ஏற்பது உள்ளிட்ட விடயங்கள் இன்று முடிவு செய்யப்படலாமென தெரியவருகின்றது.
அமோக வாக்குகளினால் வெற்றியீட்டி புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று திங்கட்கிழமை முதன்முதலாக சந்திக்கவுள்ளார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

புதிய ஜனாதிபதியின் அழைப்புக்கிணங்க இந்தச் சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்வர் என்று அவர்கள் மேலும் கூறினர். ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாகப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment