January 18, 2015

ராஜபக்ஷவினரின் லம்போகினி கார் மீட்ப்பு!!

மகிந்தராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவருக்கு சொந்தமான லம்போகினி கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டில் இருந்து இந்த கார் மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது கார் தொடர்பில் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்க குறித்த இராணுவ அதிகாரி தவறியுள்ளார்.
தேர்தலின் போது பாதுகாப்பு கருதி இந்த கார் குறித்த இராணுவ அதிகாரியின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மகிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவினால் எட்டு கார்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
அவற்றில் நான்கு கார்கள் ஏற்கனவே வெளிநாடொன்றுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியநான்கு கார்கள் சிறிலங்காவிலேயே வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment