January 18, 2015

யாழ்ப்பாணம் – கொழும்பு சொகுசு பஸ்ஸொன்று தீப்பற்றியுள்ளது!

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியின் வத்தளை பகுதியில் சொகுசு பஸ் ஒன்று தீப்பற்றியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பஸ்ஸின் மின்சுற்றில் ஏற்பட்ட கோளாறே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment