January 18, 2015

யேர்மனியில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2015!!

தமிழர் திருநாள் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா.அது தமிழரது தேசியத்தின் குறியீடான நாள்.மானிட
வாழ்வுக்கு ஆதாரமாகிய இயற்கைக்கு நன்றி சொல்லும் தமிழரது உயர் பண்பாட்டின் வெளிப்பாடு இந்தத் திருநாள்.அவ் வகையில் யேர்மன் நாட்டிடிலும் தமிழர் திருநாள் மிக சிறப்பாக நடைபெற்றது .புலம்பெயர்ந்து பரந்து விரிந்து வாழ்ந்தாலும் எமக்குள் இணைந்து கொள்வதற்கும், எமது பலத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும் ‘தமிழர் திருநாள்’ மிகப் பொருத்தமானதாகும்.


வேற்றுப் பண்பாட்டு, வேற்று மொழிப் புறச் சூழலில் வளரும் எமது இளம் தலைமுறைக்கு – அவர்களது வேர்தேடும் பயணத்திற்கான தொடக்க நாளாகவும் அமைந்தது . சிங்கள பேரினவாதிகளின் சட்டங்கள் எமது தாயகத்தை துண்டாடும் நிலையிலும் ;ஒரு தனித்துவமான இனமாக நாம் எமது சமூகப் – பண்பாட்டு வாழ்வியலை நிலை நிறுத்தும் முகமாக எமது தேசியத்தை அவர்களால் எதுவும் செய்துவிட முடியாது என்பதை பறைசாற்றும் நாள் - இத் திருநாள்.

தமிழர் தேசிய அடையாளம் , மொழி , காலாச்சாரம் , பண்பாட்டை நிலைநிறுத்தி இத் திருநாளில் ஆரம்பநிகழ்வாக தேசியக்கொடியேற்றலை தொடர்ந்து தமிழ் மரபு பொங்கலொடு இளையோர்கள் , சிறுவர்களால் கலை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது. அத்தோடு தாயகத்தில் இன அழிப்பாலும் , இயற்கை அனர்த்ததாலும் மிகப் பெரும் துயர வாழ்வை தொடரும் எமது உறவுகளுக்கு உதவிக் கரம் நீட்டும் முகமாகவும் இத் திருநாளில் யேர்மன் பல பிரதேசங்களிலும் வேலைத்திட்டங்கள் அமையப்பெறுகின்றது .அத்தோடு அவசர வெள்ளநிவாரண உதவியாக தாயக மக்களுக்கு 10 000 € வை யேர்மன் வாழ் மக்களால் அனுப்பிவைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

























No comments:

Post a Comment