மகிந்த அரசாங்கத்தின் மோசடிகள் குறித்த மேலும் சில ஆவணங்கள் கண்டுபிடிப்பு!
மகிந்த அரசாங்கத்துக்கும், ஸ்டேன்டர்ட் சார்ட்;ர்ட் வங்கிக்கும் இடையில்
ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஹெட்ஜின் உடன்படிக்கை தொடர்பான இரகசிய ஆவணங்கள்
அடைங்கிய சிறிலங்பெற்றோலிய கூட்டுத்தாபத்தின் ஐந்து அறைகள் மூடி அரசாங்க
முத்திரை இடப்பட்டுள்ளன.
7.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த உடன்படிக்கையில் மகிந்தவின் குடும்பம் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின்
பேற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும், குறித்த வங்கிக்கும் இடையிலான இந்த
உடன்படிக்கை கடந்த 2013ம் ஆண்டு நிறைவுறுத்தப்பட்டது. இதனால் சிறிலங்காவின்
பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்கி இருந்தது.
இது
குறித்த ஆவணங்களை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும்,
பணிப்பாளர்கள் குழுவின் உறுப்பினர்களும் பயன்படுத்தி ஐந்து அறைகள் இவ்வாறு
மூடப்பட்டுள்ளன.
மின்சார மற்றும் சக்திவளத்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் அழிக்கப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த அறைகள் மூடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment