January 17, 2015

அனந்தி சசிதரன் தமிழரசுக் கட்சி கட்சியில் இருந்து இடை நிறுத்தம்!

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக, கட்சியின் உறுப்பினரும், மத்திய குழு உறுப்பினருமாகிய திருமதி அனந்தி சசிதரனை, கட்சியில் இருந்து
இடைநிறுத்தியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கின்றது.

அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கத்தினால் அனந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

மூன்று காரணங்களைச் சுட்டிக்காட்டி, அவை தொடர்பில் அனந்தியின் கவனம் ஈர்க்கப்படுவதாகவும், அவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இம்மாதம் 11 ஆம் திகதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment