January 18, 2015

விஜயகலா கதிரைக்கு வந்தார்!மாவை கனவு பொய்த்தது!

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராகும் மாவை.சேனாதிராசாவின் கனவு மீண்டும் பொய்த்துள்ளது.மைத்திரியின் புதிய அமைச்சரவையில் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சராகப்
பொறுப்பேற்றுள்ள விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின்ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களின்போது இணைத் தலைவராக நியமிக்கப்படவுள்ளார்.

இதுவரை காலமும் இணைத்தலைவராகப் பதவி வகித்துவந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பதவியைத் தொடரமுடியாத நிலையில் அந்தப்பதவியை பிரதி அமைச்சர் விஜயகலாவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், அடுத்த பொதுத் தேர்தல் வரையான காலப்பகுதிவரை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுடன், பிரதி அமைச்சர் விஜயகலாவும் இணைத்தலைவராகச் செயற்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்றவகையினில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராகும் மாவை.சேனாதிராசாவின் கனவு மீண்டும் பொய்த்துள்ளது.

No comments:

Post a Comment