ஊர்காவற்றுறை பிரதேசத்தில் இராணுவத்தினரும் கடற்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜயனார் கோயிலுக்கு அருகில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்று நேற்று கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அப்பகுதிக்கு இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை தொடக்கம் கடற்படையினரும், இராணுவத்தினரும் இணைந்து ஆயுதங்களை மீட்பதற்காக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இன்று காலை தொடக்கம் கடற்படையினரும், இராணுவத்தினரும் இணைந்து ஆயுதங்களை மீட்பதற்காக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment