யாழ்ப்பாணத்தில் இளவாலையை பூர்வீகமாக கொண்ட தமிழ் யுவதி ஒருவர் கனடாவில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்து ஒன்றில் இறந்து உள்ளார்.
சதாயினி விஜயகுமார் – வயது 17 என்பவரே மார்க்ஹம் நகரத்தில் இருந்து பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் காட்டுப் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தபோது எதிர்பார்த்து இராத விதமாக இறக்க நேர்ந்தது.
காட்டில் இவர்கள் இறைச்சியை நெருப்பில் வாட்டி உண்டனர். இவரே இறைச்சியை நெருப்பில் வாட்டி, தயார் செய்து, ஏனையோருக்கு உண்ண கொடுத்து உள்ளார். இதற்கு பிற்பாடு இவர் உண்ண தொடங்கினார். இறைச்சியோடு இருந்த எலும்பு இவரது மூச்சுக் குழாயில் சிக்கியது. கூட சென்று இருந்தவர்கள் இவரை காப்பாற்ற பகீரத முயற்சிகள் மேற்கொண்டனர்.
இவர்கள் வந்திருந்த இடம் காட்டுப் பகுதி என்பதால் மீட்பு ஹெலிகப்டர், அம்புலன்ஸ் ஆகியன உரிய நேரத்துக்கு வர முடியாததால் இவரின் மரணம் தவிர்க்க முடியாதது ஆகி விட்டது.
இவர் யெமனில் பிறந்தவர். சவூதி அரேபியாவில் வசித்தவர். கனடாவில் வட்டெர்லோ பல்கலைக்கழக மாணவி ஆவார்.

No comments:
Post a Comment