June 24, 2014

மாம்பழத்தை அடுத்து இந்திய வெற்றிலைக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ள நிலையில், தற்போது இந்திய வெற்றிலைகளுக்கும் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில்,
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெற்றிலைகளில் சால்மொலினா என்ற இரசாயனப் பொருள் அதிக அளவில் மிகுந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த இரசாயனப்பொருள் மனிதர்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை தோற்றுவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதேபோன்று, வங்காளதேசம், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் வெற்றிலைகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மே முதலாம் திகதியிலிருந்து இந்தியாவில் இருந்து அல்போன்சா வகை மாம்பழங்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment