ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும், இருபத்தியோராம் நூற்றாண்டின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான தமிழீழத்தில், இறுதிவரை
மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான ஐந்தாம் ஆண்டு நினைவு கவனயீர்ப்பு நிகழ்வான, மே 18 - தமிழ் இன அழிப்பு நாள் பேர்ண் பாராளுமன்றம் அருகில் 17.05.2014 சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ் மற்றும் தமிமீழத் தேசியக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல்இ அகவணக்கம்இ உறுதிமொழியுடன்இ மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில் எழுச்சிப்பாடலுடன் கவிவணக்கங்களும் இடம்பெற்றன.
நிகழ்வில் சிறப்பு வெளியீடாக தமிழீழ தேசியத்தலைவர், தமிழீழம், தமிழ் இன அழிப்பை வெளிப்படுத்தும் வகையிலான தபாற்தலைகள் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வில் சமகால அரசியல் தொடர்பான எழுச்சியுரைகளுடன், இளையோர்களால் வேற்றின மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஜேர்மன், பிரெஞ்ச், இத்தாலி மொழிகளில் பேச்சுக்கள் இடம்பெற்றிருந்ததுடன் இன அழிப்பு சார்ந்த துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து சுவிஸ் நாட்டின் கொடியுடன் தமிழீழத் தேசியக்கொடியும் இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரமான தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் நிகழ்வு ஷவலிகளிலிருந்து வலிமை பெறுவோம்! உறுதி கொள்வோம்! உரிமை மீட்போம்!|என்ற உணர்வுடன் நிறைவுபெற்றது.
இதன் தொடர்ச்சியாக வலே தமிழ் சங்கத்தினரின் ஏற்பாட்டில் சியோன் பெரிய தேவாலயத்தில் 18.05.14 இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பெருமளவிலான தமிழ் மக்களோடுஇ பலநூற்றுக்கணக்கான வேற்றினத்தவர்களும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர். அத்தோடு பிரெஞ்ச் மொழியிலான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கபட்டன.

No comments:
Post a Comment