வடக்கின் இராணுவ மயத்தை நியாயப்படுத்தவே பாதுகாப்புச் செயலர் போர் ஒன்று
உருவாகாமல் தடுக்கவே பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் போரை மக்கள் எப்போதும் தொடங்குவதில்லை என்பதும் இராணுவத்தினரின் ஆயுத ஒடுக்குமுறை மக்கள் மீது திணிக்கப்படும் போது மக்கள் எடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகளே போராக வெடிக்கின்றன என்பதே உலகம் முழுவதிலும் உள்ள வரலாறு.
உண்மையில் போர் விரிவதைத் தடுக்க வேண்டுமானால் வடக்குக் கிழக்கில் இருந்து படையினர் வெளியேற்றப்பட்டு இங்கு ஒரு சிவில் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதே ஒரே வழி என்பதை ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். குடாநாட்டில் அண்மைக்காலமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இராணுவக் கெடுபிடிகள் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது
அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபிலவுப் பகுதியில் படையினரால் கட்டி அமைக்கப்பட்ட வீடுகளை பொது மக்களுக்கு வழங்கும் வைபவத்தின் போது உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சச அவர்கள் வெளியிட்ட ஒரு முக்கியமான கருத்தை நாம் கவனத்துக்கு எடுக்காமல் விடமுடியாது. அவர் மட்டுமன்றி பல்வேறு அரச தரப்பினருமே வடக்குக் கிழக்கில் பெருந்தொகையான படையினர் நிலைகொண்டு இருப்பதற்குப் பல்வேறு காரணங்களை முன்வைத்து வருகின்றனர். இவற்றில் படையினர் நிலைகொண்டு இருப்பதற்குப் பல்வேறு காரணங்களை முன்வைத்து வருகின்றனர். இவற்றில் பல ஒன்றையொன்று சார்ந்தனவாகவும் இன்னும் சில ஒன்றுடன் ஒன்று முரண்பட்டனவாகவும் அமைந்திருந்தமை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஆனால் பாதுகாப்புச் செயலாளர் முன்வைத்த காரணம் ஏற்கெனவே வெளிவந்தவைகளை விட தாக்கமானதாகவும் வடபகுதி மக்கள் மேலும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை பூடகமாக உணர்ந்து வருவதாகவும் அமைந்துள்ளது. அது மட்டுமன்றி தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வரும் திடீர் இராணுவச் சுற்றி வளைப்புகள், சோதனை நடவடிக்கைகள், கைதுகள் என்பவற்றை நியாயப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளமையை நாம் அவதானிக்க முடியும்.
அதாவது மீண்டும் ஒரு போர் வராமல் தடுப்பதற்காகவே வடக்கில் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்புச் செயலாளர் வெளியிட்ட கருத்துக்கள் மேலும் மேலும் கெடுபிடிகள் தமிழ் மக்கள் மீது அதிகரிப்பதற்கான முன் அறிவித்தலாகவே தென்படுகின்றது. மீண்டும் விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க அணிதிரண்டு வருகின்றனர் எனக் கூறப்பட்டே இராணுவச் சுற்றிவளைப்புகளும் வீதிச் சோதனைகளும் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 50 இற்கும் மேற்பட்டோர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கென கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலரின் கருத்துப்படி இந்தக் கைதுகளும் போர் வராமல் தடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியே.
எனவே அதிகளவு இராணுவத்தினர் வடக்கில் குவிக்கப்படுவது மீண்டும் சுற்றி வளைப்புகளும், கைதுகளும் நிறைந்த ஒரு அச்சமூட்டும் நிம்மதியற்ற ஒரு வாழ்வைத் தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கே என்பதை மிகவும் தெளிவாகப் புரியும்படி பாதுகாப்புச் செயலாளர் கருத்துக்கள் மூலம் வெளியிட்டுள்ளார். ஆனால் இப்படியான நடவடிக்கைகள் மூலம் போர் உருவாகுவதைத் தடுக்க முடியாது என்பதும் இல்லாத போர்களையே உருவாக்கிவிடும் என்பதையும் உலக வரலாறு மீண்டும் மீண்டும் கற்பித்து வந்துள்ளது. ஆனால் ஆட்சி அதிகாரமும் அதிகாரப் பலமும் கொண்டவர்கள் எப்பொழுதுமே ஆயுத பலத்தால் போர் உருவாவதைத் தடுத்து விட முடியும் என நம்புகின்றனர். ஆனால் இந்த வழிமுறை மூலம் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்த முடியுமே ஒழிய போரை நிறுத்திவிட முடியாது.
போர் உருவாவதற்கான மூல காரணம் களையப்படுவதன் மூலமே போரை நிரந்தரமாக இல்லாமற் செய்யமுடியும். அதை உதாசீனம் செய்து ஆயுத பலத்தால் போரை இல்லாமல் செய்யும் முயற்சிகள் காலம் காலமாக தோல்விகளைச் சந்தித்து வந்துள்ளன. 1983 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட சில வருடங்களில் வட பகுதியில் இராணுவம், பொலிஸ் என்பவற்றின் சுற்றி வளைப்புகள், தேடுதல் வேட்டைகள், கைதுகள் என ஒரு அச்சம் நிறைந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டது. எந்தவொரு இளைஞனும் எந்தவொரு காரணமுமின்றி கைது செய்யப்பட்டு சித்தரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு சிறையிடப்படலாம் என்ற நிலை நிலவியது. ஆயுதம் ஏந்திப் போராடினால் தான் தப்பமுடியும் என்ற நிலை உருவானது. எனவே, ஜே.ஆர். ஜெயவர்த்தனவால் கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவ ஒடுக்கு முறை தமிழ் மக்கள் மத்தியில் பல ஆயுதப் போராட்ட முறைகளை உருவாக்கின. ஆயுதப் போராட்டம் முனைப்புடன் வீறுகொண்டெழுந்தது.
காலப் போக்கில் ஏனைய அமைப்புக்கள் செயலிழந்து போக விடுதலைப் புலிகள் தனிப் பெரும் சக்தியாக எழுச்சி பெற்றனர். அவர்கள் பல பிரதேசங்களைத் தம்வசம் வைத்திருக்கும் அளவுக்கும் தனியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் பலம் பெற்றனர். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் இராணுவ ஒடுக்குமுறை வழி முறை இலங்கைத்தீவே பெரும் பேரழிவுகளைச் சந்தித்த ஒரு பெரிய போரையே உருவாக்கியது. ஏற்கெனவே இலங்கை பெற்ற இந்தக் கொடிய கசப்பான அனுபவத்தை இன்றைய ஆட்சியாளர்கள் நன்றே புரிந்து வைத்துள்ளனர். எனினும் இவர்களும் கூடப் போரின் மூல காரணத்தை களைந்து ஒரு நிரந்தர சமாதானத்தை உருவாக்கத் தயாரில்லை. மாறாக போர் உருவாகுவதற்கு முன்பே ஒடுக்கு முறைகளை மேலும் மேலும் அதிகரிப்பதன் மூலம் ஒடுக்கப்படும் மக்களைச் செயலற்ற நிலைக்குத் தள்ளி அடிமைகளாக்கி அமைதியை நிலைநாட்ட விரும்புகின்றனர்.
இனத் தனித்துவத்தை அடக்கி பெரும்பான்மை இனத்துக்குள் கரைத்து விடும் ஒரு நீண்டகால நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். இதை ஆயுத முனையில் நிறைவேற்றிவிட முடியும் என நம்பும் நபர்களில் பாதுகாப்புச் செயலரும் ஒருவர். எனவே தான் அவர் போர் உருவாகாமல் இருக்க இராணுவ ஒடுக்குமுறைகளை வலுப்படுத்துவது என்ற வழி முறையைத் தெரிவுசெய்துள்ளார். அதேவேளையில், சர்வதேச அழுத்தங்களைக் குறைக்கும் வகையில் அரச தரப்பினர் வடக்கில் நிலைகொண்டுள்ள படையினரின் தொகையைக் குறைத்து காட்டி வருகின்றனர். எனினும் ஒவ்வொருவரும் வெளியிடும் கருத்துக்கள் ஒன்றில் இருந்து ஒன்று முரண்படுவதில் இருந்தே அவற்றின் உண்மைக்குப் புறம்பான தன்மையை நாம் புரிந்துகொள்ள முடியும்.
17.06.2012 இல் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வடக்கில் படையினரின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைக்கப்பட்டு விட்டதாகவும் தற்சமயம் 15, 600 படையினரே கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் 9.7.2012இல் யாழ். பாதுகாப்பு தலைமையகத்தின் இணையத்தளம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கிறது. அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆற்றிய உரை ஒன்றின் போதே 2009 இல் வடக்கில் 70 ஆயிரம் படையினர் இருந்ததாகவும் தற்சமயம் 12 ஆயிரம் பேரே இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். எப்படி இருப்பினும் வடக்கில் வாழும் 5 பொதுமக்களுக்கு ஒருவர் என்ற விகிதாசாரத்தில் படையினர் குவிக்கப்பட்டிருப்பதாக உத்தியோக பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவா மாநாட்டை அண்மித்த காலப் பகுதியில் சில சிறுபடை முகாம்கள் மூடப்பட்டது உண்மை. ஆனால், அவர்கள் பெரிய முகாம்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனரேயொழிய வடக்கை விட்டு வெளியேற்றப்படவில்லை. அதேவேளையில் சிவில் நிர்வாகமும் இராணுவத் தலையீடும் நிறுத்தப்படவில்லை. மேலும் மிருசுவில், இயக்கச்சி ஆகிய பகுதிகளில் முகாம்களை விஸ்தரிக்கும் நோக்குடன் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இப்படி இராணுவம் வடக்கில் குறைக்கப்பட்டு விட்டது எனக் கூறப்படும் ஏமாற்று வார்த்தைகள் பலவிதத்திலும் அம்பலப்படுத்தப்பட்டு, வடக்கில் இராணுவம் நிலைகொண்டிருப்பதை நியாயப்படுத்திப் புதிய போர்ப் பூச்சாண்டி காட்டப்படுகின்றது. அந்த நோக்கத்துக்காகவே புலி வேட்டை என்ற பெயரில் சுற்றி வளைப்புகளும் சோதனை நடவடிககைகளும் கைதுகளும் கட்ட விழ்த்து விடப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment