கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும்வன்னிக்கு செல்லும் மக்களை ஆள்அடையாள அட்டையினை சோதனை
செய்து அவர்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
தென்பகுதியில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் பயணிகளை சோதனை செய்யும் நடவடிக்கையினை சிறீலங்கா படையினர் அதிகரித்துள்ளார்கள்.
பேருந்துக்களில் செல்லும் பயணிகளை வவுனியா ஓமந்தையில இறக்கி அவர்களை அடையாளப்படுத்தி சோதனை செய்யும் நடவடிக்கையினை படையினர் தீவிரப்படுத்தியுள்ளார்கள்.
அத்துடன் ஏ.9 வீதியின் இருமருங்கிலும் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தின் நுளைவாயிலான ஆனையிறவு பளை போன்ற பகுதிகளில் சிறீலங்கா காவல்துறையினரும் படையினரும் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment