புங்க்டுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 6ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டு உள்ளார்.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை மாணவி கொலை வழக்கு நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது குறித்த வழக்கில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள 12 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதனை அடுத்து நீதவான் அவர்களிடம் உங்கள் சார்பில் சட்டத்தரணி எவரேனும் ஆஜார் ஆகவில்லையா என வினாவினார். அதற்கு அவர்கள் இல்லை என பதிலளித்தனர். நீங்கள் ஏதேனும் மன்றில் தெரிவிக்க விரும்புகின்றீர்களா ? என வினாவினார் அதற்கு அவர்கள் இல்லை என பதிலளித்தனர்.
அதனை தொடர்ந்து 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 6ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டதுடன் வழக்கினையும் 6ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

No comments:
Post a Comment