இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட அதிர்வலைகளில் சாலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட விபத்து பிரதான இடத்தை வகிக்கின்றது.
இந்த விபத்திற்குப் பின்னர் பல்வேறு தரப்புக்களில் இருந்து பல சந்தேகங்களும், கருத்துக்களும் வெளியாகியிருந்தன. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, விடுதலைப் புலிகள், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு என இந்த தரப்புக்களில் யாரேனும் ஒரு தரப்பு சாலாவ இராணுவ முகாமினை இலக்கு வைத்திருக்கலாம் என்ற கருத்து பரவலாக வெளியாகியிருந்தன.
எனினும் இவ்விடத்தில் இலங்கை அரசாங்கம் ஒரு ராஜதந்திர விடையத்தை கையாண்டதாகவே அரசியல் அவதானிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உள்நாட்டுப் போரின் போது தடைசெயப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அத்தடை செய்யப்பட்ட ஆயுதங்களினால் தான் இறுதிக் கட்டப் போரின் போது பொதுமக்கள் அதிகளவானோர் கொல்லப்பட்டனர் என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அவ்வாறு இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினரினால் பயன்படுத்தப்பட்டு வந்த ஆயுதங்களில் எஞ்சியவை இந்த சாலாவ இராணுவ ஆயுதக்கிடங்குகளில் தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றை இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் அழித்திருப்பதாகவும் இப்பொழுது சந்தேகங்கள் வெளியாகியிருக்கின்றன.
எனினும் இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முடிவில் தான் அதன் உண்மைகள் கண்டறியப்படும் என்கின்றது இலங்கை அரசாங்கம்.
இதேவேளை சாலாவ ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட விபத்தின் போது இழக்கப்பட்ட சொத்து விபரங்கள், உண்மையான உயிரிழப்புகள் போன்றனவற்றின் இன்றளவும் அரசாங்கம் சரியான புள்ளிவிபரத்தோடு வெளியிடவில்லை.
மாறாக அவை முற்றாக மறைக்கப்பட்டே வருகின்றன. ஆயுதங்களின் பெறுமதி தொடர்பான தகவல்கள் இராணுவ பிரிவிடம் ஒருபோதும் இல்லாமல் போகாது என்பதும், இதுவும் விசாரணைகளின் பின்னரே அறிவிக்கப்படும் எனவும் அரசு கூறுவது பொறுத்தமற்ற கருத்தாக அமைவதாக இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டும் தகவல்களாக இருக்கின்றன.
குறிப்பாக தாக்குதல் நடந்த மறுகணம், அது தொடர்பான தகவல்களை அரசாங்கம் வெளியிட்டு, பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீட்டில் கவனம் செலுத்தும்.
ஆனால் சாலாவ வெடிப்புச் சம்பவத்தில் இலங்கை அரசாங்கம் மௌனம் காட்டி வருவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
விடுதலைப் புலிகள் மீதான சந்தேகம்!
கடந்த 2009ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் எவையும் நடத்தப்பட்டிருக்கில்லை. எனினும், சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகளைக் கொண்டு புலிகள் மீள உருவாகின்றார்கள். தாக்குதல்கள் தொடுக்கத் தயாராகின்றார்கள் என சிங்கள பேரினவாதக் கட்சிகள் கூச்சல் போடத் தொடங்கியிருந்தன.
தவிர, ஆங்காங்கே சில ஆயுதங்களும் மீட்கப்பட்டிருந்தன. எனினும் விடுதலைப் புலிகள் மீது இந்த ஆயுதக் கிடக்கில் ஏற்பட்ட விபத்தை தொடர்பு படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால், இலங்கையில் இன்னமும் பயங்கரவாதச் தடைச்சட்டம் நீக்கப்படாமல் இருக்கின்றது. எனினும் புலிகள் தான் இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு காரணம் என இலங்கை அரசாங்கத்தினால் உறுதியான ஆதாரங்களோடு குற்றச்சாட்டுகக்களை முன்வைக்க முடியாது போயுள்ளது.
அரசாங்கம் இத் தாக்குதலோடு புலிகளை தொடர்புபடுத்தியிருந்தால், மகிந்த ராஜபக்சவினால் ஏற்படுத்திய போர் அற்ற நாட்டில் மீண்டும், மைத்திரி ரணில் அரசாங்கம், பாதுகாப்பு விடையத்தில் அலட்சியப் போக்கை கடைப்பிடித்து வருகின்றதா என சிங்கள மக்கள் மத்தியில் கேள்விகளை ஏற்படுத்தியிருக்கும்.
ஆனால் புலிகள் மீது குற்றச்சாட்டை முன்வைத்து தப்பிப்பதற்கான சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாதாகவே சில அவதானிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். இருப்பினும், அது தொடர்பாக அரசாங்கம் உத்தியோகபூர்வமான எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இதுவொரு புறமிருக்க, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கும் அதே நிலைதான். மறைமுகமான பாதுகாப்பு செயற்பாடுகளை அரசு மேற்கொள்வது என்பது தற்போதைய ஆட்சி நிலைப்பாட்டில் சாதகத்தன்மை குறைவே.
மற்றொரு புறம் மஹிந்த மீது எத்தகைய குற்றச்சாட்டுகள் திணிக்கப்பட்டாலும் அவை நாட்டில் யுத்ததை நிறுத்தி சிங்கள மக்களுக்கு வெற்றி பெற்று கொடுத்த மன்னர் என்ற ஆதரவு மட்டும் மக்கள் மத்தியில் மஹிந்தவிற்கு குறையாது.
இங்கு மஹிந்தவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செல்வாக்கை சிங்கள மக்கள் மத்தியில் இருந்து சரியச் செய்து, வெற்றி நாயகன் என்னும் அவரின் கோசத்தை அழிக்கப் பிரதான நபர் ஒருவர் தேவைப்பட்டவர் தான் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.
அவரை தன் பக்கம் இணைத்துக் கொள்வதற்கான காய்களை மிகத்துள்ளியமாக நகர்த்தினார் பிரதமர் ரணில். இவ்வாறு பொன்சேகாவை அரசாங்கத்தோடு இணைப்பதன் மூலமாக சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் ஏற்படும் பாதிப்புக்களை இல்லாமல் செய்வதற்கு அவர் மீதான போர்க் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் அழிக்கப்பட வேண்டும். அந்த அவசியத்தின் ஒரு பகுதி தான் இந்த சாலாவ இராணுவ வெடிப்புச் சம்பவம் என்கிறார்கள் அவதானிகள்.
சாலாவ விபத்து ஏற்படுவதற்கு முன்பு, மகிந்த ஆட்சியை வீழ்த்துவதற்கும், ஏனைய தொடர்புகளுக்கும், ரணில், பொன்சேகா உறவு நட்பின் அடிப்படையில் இருந்தது.
அதன் பின்னர், மகிந்தவை வீழ்த்துவதற்கான தேர்தலின் போது, அவர்களின் உறவு இன்னமும் நெருங்கியிருந்தது. எனினும் சாலாவ வெடிப்பு இடம் பெற்றதற்கு பின்னரே அவரை கட்சியில் உத்தியோக பூர்வமாக இணைத்துக்கொண்டார் ரணில்.
இதேவேளை, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நீண்ட நாட்களுக்குப் பின்னர் ரணில் பொன்சேகாவை கட்சியில் இணைப்பதற்கு ஏன் காலதாமதத்தை எடுத்துக் கொண்டார் என்னும் சந்தேகம் கேள்விகளாக எழுப்பப்படுகின்றன.
அதாவது, மேலே சொன்னது போன்று, பொன்சேகா, மகிந்தவை சர்வதேசத்தின் முன்னால் நிறுத்துவதற்கான ஆதாரங்கள் அந்த ஆயுதக் கிடங்கில் இருந்திருக்கலாம் என்னும் வெளிப்படையான சந்தேகங்களே.
இந்த ஆயுதக் கிடங்கில் ஆட்லறிகளும், பல்குழல் பீரங்கிகளும் அதிகளவாக காணப்பட்டன என்று கூறப்பட்டது. எனினும் இங்கு களஞ்சியப்படுத்தப்பட்ட ஆயுத அளவுடன் ஒப்பிடுகையில் அவை ஒரே நேரத்தில் வெடித்திருக்குமானால் மிகப்பெரிய தேசம் ஏற்பட்டிருக்கும்.
அது எண்ணிப்பார்க்க முடியாத பேரிழப்பாக அமைந்திருக்கும் என்பதே உண்மை. எனினும் ஆயுதக் கிடங்கு வெடிக்கும் போது குண்டுகளில் இருந்த வெடிமருந்துகள் சீறி, கருகிப் போனதால் தான் தீயும், புகையும் அதிகமாக இருந்து வெடிப்பின் தேசம் குறைந்தது.
சேதம் குறைந்து வெடிப்பு நிகழ வேண்டும். அதே சமயம் ஆயுதங்கள் முற்றாக அழிக்கப்படவும் வேண்டும் இது இராணுவம் மற்றும் அரசின் ஆதரவு இல்லாமல் சாத்தியம் இல்லை என்பது உறுதியாக கூற முடியும்.
இங்கு மஹிந்த இதனைக் காட்டிக்கொடுத்தால் அவர்மீது சர்வதேச போர்க் குற்றம் நிரூபிக்கப்படும். அதேவேளை அரசு வெளிப்படுத்தினால் சர்வதேச உதவிகளை இழந்து நல்லாட்சிக்கு பங்கம் ஏற்படும். அத்துடன் பொன்சேகாவும் பயன்படாமலேயே போய்விடுவார்.
ஆக மொத்தம் மஹிந்தவிற்கும் அரசிற்கும் அவசியம் ஆயுதக் கிடங்கு அழிக்கப்பட வேண்டும். அதே சமயம் வெளிவராமல் இருக்கவும் வேண்டும்.
இங்கு வெளிப்பட வேண்டியது எது வெனில் ஆயுதக் கிடங்கில் அப்படி என்ன இருந்தது. புலிகள் மீதான முறையற்ற தாக்குதல் நடாத்த இலங்கை இராணுவம் சேமித்து வைத்திருந்த ஆயுதங்களை இரகசியமாக, அதேவேளை சேதம் குறைவாக அழிக்க மஹிந்த ஆதரவுடன் அரசினால் செய்யப்பட்ட சதி எனும் சந்தேகம் வலுப்பெற்றுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.
சாலாவுக்குள் உளவுப்பிரிவினை அனுமதிக்காமல் அரசினால் சாதூர்யமாக மூடி மறைக்கப்படும். இதுவும் தமிழ் இனம் மற்றும் புலிகள் மீதான முறையற்ற தாக்குதலை இலங்கை மறைக்கும் செயற்பாடாக அமைகின்றது.
இது தொடர்பில் அரசு இனியும் ஒன்று கூடி மூடி மறைக்குமானால் சந்தேகம் உண்மையாகிவிடும் எனவும் கருத்துகள் வெளிவரத் தொடங்கிவிட்டன.

No comments:
Post a Comment