August 1, 2016

அகதி அந்தஸ்து கோரியவர்கள் நாடு திரும்பினால் $20,000 டொலர்!

அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றவர்களில் சிலர் பப்புவா, நீகுனியா மற்றும் மானஸ் தீவு தடுப்பு முகாமில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்து காத்திருப்பவர்கள், தாங்களாக முன்வந்து நாடு திரும்பினால் அவர்களுக்கு $20,000 அவுஸ்திரேலிய டொலர் வரை வழங்கப்படும் என்று அவுஸ்திரேலியா அரச அதிகாரிகள் ஆசை காட்டி வருவதாக அகதிகள் நலனுக்காக குரல் கொடுக்கும் Refugee Action Coalition அமைப்பின் Ian Rintoul தெரிவித்துள்ளார்.


இதற்கு முன் $10,000 டொலர் தருவதாக கூறிவந்த அதிகாரிகள் இப்போது தொகையை இருமடங்கு உயர்த்தியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், நாடு திரும்ப முன்வருவோருக்கு அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறும் அவுஸ்திரேலியாவின் Department of Immigration and Border ப்ரொடெக்ஷன், குடிவரவு குடியகழ்வு கடல் பாதுகாப்பு அதிகாரிகள் அரசு எவ்வளவு தொகை வழங்க முன்வருகின்றது என்ற தகவலைக் கூற மறுத்துவிட்டனர்.

மானஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களில் சுமார் ஆயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





No comments:

Post a Comment