தமிழகத்தின் – குமரி மாவட்டம் – முட்டம் கடற்கரையில் இருந்து அவுஸ்திரேலியா தப்பி செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 14 பேரை, கடந்த சில தினங்களுக்கு முன் கியூ பிராஞ்ச் பொலிசார் கைது செய்திருந்தனர்.
இவர்களில் ஆண்கள் 13 பேர் நாகர்கோவில் சிறையிலும், ஷோபனா என்ற பெண் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு இரணியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்தநிலையில், இரணியல் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதவான் குருலட்சுமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 13 ஆண்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான், வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார் என, இந்திய ஊடகமான தினகரன் செய்தி வௌியிட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment