ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது விவேகமுள்ள தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கனடா அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பினை வழங்குமென கனடா வெளியுறவு அமைச்சர் ஸ்டெபன் டியன் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் நீதிமன்ற முறைமையினை பலப்படுத்தி ஜனநாயத்தை வலுவடையச் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கனடா வெளியுறவு அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஷ்வரா, கனடாவிற்கானஇலங்கை உயர்ஸ்தானிகர் கே.ஏ.ஜவாட், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் ஷேலி விட்டின் உள்ளிட்ட கனடா நாட்டு பிரதிநிதிகள் சிலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment