மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராம பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தின் பயிற்சி முகாமில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயுதப்பயிற்சியின் காரணமாக ஏற்படுகின்ற பாரிய அதிர்வுகளினால் சன்னார் கிராமத்தில் பல கர்ப்பிணி தாய்மார்களுக்கு திடீர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசனைக்கான வலய செயலணி இன்று (28) வியாழக்கிழமை காலை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்றது.
நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசனைக்கான வலய செயலணியின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது, கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்த சன்னார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராமத்தை அண்டிய பகுதியில் பல ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவத்தின் பாரிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த இராணுவத்தில் முகாமிலேயே இராணுவ பயற்சி முகாமும் காணப்படுகின்றது.
இராணுவ பயிற்சி முகாமில் தொடர்ச்சியாக இராணுவத்திற்கு ஆயுதப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. குறித்த பயிற்சி முகாமில் இருந்த சுமார் 500 மீற்றர் தொலைவில் மக்களின் குடியிருப்பு காணப்படுகின்றது.
இராணுவ பயிற்சி முகாமில் மோட்டார் செல் பயிற்சி, கண்ணிவெடி செயலிழப்பு, கைக்கண்டு பயிற்சி மற்றும் துப்பாக்கி சூட்டு பயிற்சி போன்றவை இடம்பெற்று வருகின்றது.
குறித்த பாரிய பயிற்சிகளினால் சன்னார் கிராமத்தில் பலத்த அதிர்வுகள் ஏற்படுகின்றது.
இதன் காரணத்தினால் குறித்த கிராமத்தில் உள்ள பல கர்ப்பிணி தாய்மார்களுக்கு திடீர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளது.
சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கடந்த 2 மாதங்களுக்குள் இவ்வாறு கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம் குறித்த இராணுவ பயிற்சி முகாமில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயுதப்பயிற்சியினால் ஏற்பட்டுள்ள அதிர்வு மற்றும் வெளி வருகின்ற புகையினை சுவாசிக்கின்றமையினாலேயே ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இச்சம்பவத்தினால் அக்கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் இராணுவத்தினர் சன்னார் கிராமத்தில் மக்களின் காணிகளில் நடமாடுகின்றனர். இதனால் பெண்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சில நேரங்களில் இரவுகளில் வீட்டு வளாகத்தில் இராணுவத்தை கண்டால் ஆண்கள் என்ன என்று கேட்டால் சிங்களத்தில் ஏதோ கூறிவிட்டு செல்கின்றனர்.
கேட்டால் இராணுவ பயிற்சி இடம்பெறுகின்றது என கூறுகின்றார்கள்.
சன்னார் கிராமத்திற்கு உரித்தான குளம் இராணுவ பயிற்சி முகாம் அமைந்துள்ள பகுதியிலே காணப்படுகின்றது.
குறித்த குளத்தில் சன்னார் கிராமத்தை சேர்ந்த சுமார் 172 குடும்பங்கள் நண்ணீர் மீன் பிடியில் ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் தற்போது இராணுவத்தினர் சன்னார் குளத்திற்கு செல்லும் உரிய பாதையினால் செல்ல விடாது மாற்றுப்பாதையினால் செல்ல அனுமதிக்கின்றனர்.
இதனால் மீன் பிடிக்கச் செல்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த மாற்றுப்பாதையில் யானையின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
சுமார் 500 மீற்றரில் உள்ள குளத்திற்கு 3.5 கிலோ மீற்றர் காட்டுப்பாதையூடாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கார்த்திகை, மார்களி, தை, மாசி, பங்குனி ஆகிய 5 மாதங்களிலும் மீன் பிடிக்க செல்ல முடியாது. காரணம் குறித்த காட்டுப்பாதையூடாக வெள்ள நீர் செல்லும். இதனால் வருடத்தில் 5 மாதங்கள் தொடர்ச்சியாக மீன் பிடிக்க செல்ல முடியாது.
குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்றால் அச்சத்திலேயே குளத்தினுள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டு பயிற்சி குளத்தை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது.
இதனால் குளத்தின் கரையை திரும்பும் வரை உயிரை கையில் பிடித்த நிலையிலே செல்ல வேண்டியுள்ளது. குறித்த பிரச்சினை குறித்து மீனவர்கள் இராணுவத்திடம் தெரிவித்த போது துப்பாக்கி சூடுகளுக்கு மத்தியில் எவ்வாறு மன்னாரில் இருந்து மாத்தளன் வரை சென்றீர்களே அவ்வாறு குளத்திற்கு சென்று வாருங்கள் என தெரிவித்தனர்.
அவ்வாறு பல்வேறு பிரச்சினைகளை சன்னார் மக்கள் எதிர் நோக்குகின்றனர். எனவே தொடர்ச்சியாக பல்வேறு சாட்சியங்களிலும் மக்களின் பிரச்சினைகள் சாட்சியமாக பதிவு செய்யப்படுகின்றது.
எனினும் சாட்சியங்கள் கண் துடைப்புக்காக மேற்கொள்ளப்படுகின்றதே தவிர எவ்வித சாட்சியங்களுக்கும் எது வித தீர்வும் கிடைக்க வில்லை என தமது கருத்துக்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment