July 7, 2015

ஜேர்மனியில் வரலாறு காணாத வெப்பத்தில் சிக்கி தவிக்கும்: பரிதாபமாக பலியான 12 நபர்கள்!

ஜேர்மனி நாட்டில் கடந்த 134 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பம் சுட்டெரித்து வருவதால், நாடு முழுவதிலும் இது வரை 12 பேர் வரை பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள Kitzingen என்ற நகரத்தில்
மட்டும் சுமார் 40.3 டிகிரி வரை(104.5 பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகி உள்ளதாக ஜேர்மனியின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை மற்றும் கோடை வெப்பத்தை முறையாக பதிவு செய்ய தொடங்கிய 1881ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது தான் அதிக அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் அதிகபட்ச வெப்பமாக 40.2 டிகிரி என பதிவாகி இருந்தது. வெப்பத்திலிருந்து தப்பிக்க பொது மக்கள் நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் பெரும்பாலான நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
இந்த சமயங்களில் எதிர்பாராத விபத்துக்களில் சிக்கி உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவது வேதனை அளிக்கும் விதமாக உள்ளது.
கடந்த வாரம் இறுதியில் மட்டும் ஜேர்மனி முழுவதும் சுமார் 12 பேர் நீச்சல் தொடர்பான சம்பவங்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பவேரியாவில் 4 வயது குழந்தை, Cologne நகரில் 6 வயது குழந்தை, Siegen ஒரு சிறுவன் என நீர்நிலைகளுக்கு சென்று பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது கவலை அளிக்கும் செய்தியாகும்.
மேலும், Hamburg நகரில் நேற்று காலை முதல் நீச்சலுக்காக சென்ற சில நபர்கல் இன்னும் வீடு திரும்பாத காரணத்தால், அவர்களின் நிலை குறித்து தற்போதும் வரை எந்த தகவலும் கிடைக்காததால் அப்பகுதி மக்கள் பதற்றத்தில் உறைந்துள்ளனர்.
ஜேர்மனி முழுவதும் அதிக வெப்பம் தாக்கி வருவதால், மாலை வேளைகளில் கடுமையான இடியும் சூரைக்காற்றும் வீசி வருகிறது.
இதனால் சாலைகளின் ஓரத்தில் உள்ள பெரிய மரங்கள் சாலைகளில் சாய்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருவதும் தொடர்கதையாக மாறியுள்ளது.
வானிலை மையம் தெரிவித்துள்ள செய்தியில் கோடை வெயில் இன்னும் சில தினங்களுக்கு அதிகரித்தவாறு இருக்கும் என்பதால், பொதுமக்கள் தகுந்த எச்சரிக்கையுடன் வெளியே செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment