July 7, 2015

ஒரு இறுதிச் சந்தர்ப்பத்தை’ பயன்படுத்தி கிரீஸ் நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு பிரிட்டன் வலியுறுத்து!

கிரீஸில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மேலும் மோசமடைந்து கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்கு செல்வதற்கு முன்னதாக ‘ ஒரு இறுதிச் சந்தர்ப்பத்தை’ பயன்படுத்தி ஒரு தீர்வை காணுமாறு பிரிட்டன் யூரோ வளைய நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிரீஸில் நிலைமை மிகவும் பாரதூரமான நிலைமையினை நோக்கி சென்றுகொண்டுள்ள நிலையில் யூரோ வளைய நாடுகளின் தலைவர்கள் முன்வர வேண்டும் என்று பிரிட்டனின் வெளிநாட்டமைச்சர் சான்சிலர் ஜோர்ஜ் ஒஸ்போர்ன் வலியுறுத்தியுள்ளார்.
342. 5 பில்லியன் யூரோ கடன் சுமையால் தவிக்கும் கிறீஸ் நாடு விடுபடுவதற்கு, வரியை அதிகரிக்க வேண்டும், மானியங்களை குறைக்க வேண்டும் குறிப்பாக ஓய்வூதியங்களை குறைக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய நாடுகள் நிபந்தனை விதித்திருந்தன. இது தொடர்பில் நேற்று முன்தினம் பொதுமக்களின் கருத்தை அறியும் பொருட்டு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் 61 சதவீத மக்கள் ஐரோப்பிய நாடுகளின் நிபந்தனைகளுக்கு அடிபணியக் கூடாது என்ற அந்த நாட்டின் அரசாங்கத்தின் கருத்தை ஆதரித்து வாக்களித்ததால் கடும் நெருக்கடி நிலைமை உருவாகி இருக்கிறது.
இந்த வாக்கெடுப்பினால் , கிரீஸ் யூரோ வலயத்தில் இருந்து வெளியேறும் நிலைமை ஏற்ப்பட்டுள்ளது. இவ்வாறு கிரீஸ் யூரோ வலயத்தில் இருந்து வெளியேறினால் அது ஒரு பிழையான முன் உதாரணமாக அமைந்து விடும் என்ற காரணத்தினால், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் நெருக்கடியை சுமுகமாக தீர்க்கும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுளளனர். கிரீஸ் நாட்டின் தலைவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுளளனர்.
அத்துடன் பணம் இல்லாமை காரணமாக கிரீசின் வங்கிகள் முடங்கியுள்ளன. பணம் வழங்கும் தன்னியக்க இயந்திரங்களும் செயல் இழந்துள்ளன. இதன் காரணமாக, கிரீஸ் சென்று பணம் இன்றி கஷ்டப்படும் தனது நாட்டு மக்களுக்கு விமானம் மூலம் பணத்தை கொண்டு சென்று விநியோகிக்கும் நடவடிக்கை ஒன்றுக்கு பிரிட்டன் தயாராகிவருகிறது.
greece-paris_Demon_3366678b

No comments:

Post a Comment