July 25, 2016

புலம்பெயர் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!!!

புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு, சிறிலங்கா அரசாங்கம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.


புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் சட்டதிட்டங்களை பின்பற்றுமாறு, அந்நாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாடுகளில் செயற்படும் சிறிலங்கா உயர்ஸ்தானிரலாலயத்தில் தம்மை பதிவு செய்து கொள்வது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் தீவிரம் பெற்றுள்ளன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள பதிவு அவசியம் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பை கருத்திற் கொண்டு புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்கள் தம்மை பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

ஏதாவது ஒரு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் ஏற்படுமாயின் உடனடியாக சிறிலங்கா உயர்ஸ்தானிகரலாயம் ஊடாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் காரணமாகவே புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் தம்மை உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்றும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment