தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச தலைவரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன், வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் மேலும் நீடித்துள்ளது.
குமரன் பத்மநாதனை கைதுசெய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தொடர்ந்த வழக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான விஜித் மலல்கொட மற்றும் ப்ரீத்தி பத்மன் சூரசேன முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள்பட்டது.
இந்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்வதற்கு விதித்த தடையையும் நீடித்து உத்தரவிட்டனர்.
மூன்று சட்டங்களின் கீழ் கே.பிக்கு எதிராக விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கடந்த மே மாதம் இறுதியாக வழக்கு விசாரணை நடைபெற்ற போது சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

No comments:
Post a Comment