இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேச காணிகளை விடுவித்துக்கொள்வது தொடர்பில், அப்பிரதேச மக்கள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சந்திப்பானது அரச அதிபரின் அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வருவதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இராணுவத்தின் பிடியிலுள்ள தமது காணிகளை விடுவித்துக்கொள்வதற்காக, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இப்பிரதேச மக்கள் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததோடு, கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றையும் கையளித்திருந்தனர்.
குறித்த மகஜரில் இன்று தமது பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதுகுறித்த கலந்துரையாடலிலேயே இன்றைய தினம் ஈடுபட்டுள்ளனர்.
காணிப்பிரச்சினை தொடர்பில் இன்றைய தினம் தமக்கு தீர்க்கமான முடிவொன்று எட்டப்படாவிட்டால், சுழற்சிமுறையிலான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment