தமிழினப் படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதி கிடைக்க வேண்டுமென, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் கடந்த 1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்டோரை நினைவுகூரும் வகையில், இன்று (திங்கட்கிழமை) தமிழ்த் தேசிய வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இத்தினத்தை முன்னிட்டு இன்று காலை நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் நினைவுச்சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர், சிவாஜிலிங்கம் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
அத்தோடு, தமிழ் மக்களுக்கு தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையில் ஓர் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவேண்டுமென தெரிவித்த அவர், அதனை வெற்றிகொள்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment