முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான படுகொலைகள் தொடரில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என முல்லைத்தீவைச் சேர்ந்த முஸ்லிம் இனத்தவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ள நீதிமன்ற பொறிமுறை உட்பட ஜெனீவா தீர்மானத்தைநடைமுறைப்படுத்துவதற்கான மக்களின் கருத்துக்களை அறியும் சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய செயலணியின் முல்லைத் வலய அணியினரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நேற்று செவ்வாய்க் கிழமை காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் அலுவலகத்தில்பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்தறியும் நடவடிக்கைகளை இந்த குழுவினர் முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்த அவர் முள்ளிவாக்கால் தமிழ இன அழிப்பு தொடர்பாக இந்த செயலணியினர் முன்னியில், சர்வதேச நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்தோடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து யுத்த காலத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் பாதிப்புக்கள் தொடர்பாகவும் தெரிவித்தார் இதுதொடர்பாக அவர் ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கடந்த கால யுத்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்றுவது அவர்களுக்கான ஆடிப்படை வசதிகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக தமது கருத்துக்களை வழங்கியதாகவும் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற அழிவுகளை குற்றங்களை விசாரிக்க சர்வதேச விசாரனை நடத்தப்படவேண்டுமெனவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment