வெளிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) முக்கியஸ்தர்கள் உற்பட 53 அரசியல் கைதிகள் மற்றும் பொது மக்களின், 33ஆவது ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
'தமிழ் தேசிய வீரர்கள் தினம்' என்ற இந்த நினைவஞ்சலி இன்று காலை மன்னாரில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) மாவட்ட தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) மாவட்ட துணை அமைப்பாளர் ஏ.ரி.மோகன் ராஜ் தலைமையில் இடம் பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) மாவட்ட அமைப்பாளர் பற்றிக் வினோ மற்றும் டெலோ அமைப்பின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது வெளிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தளபதி குட்டிமணி, தலைவர் தங்கத்துரை, முன்னணிப் போராளி ஜெகன் மற்றும் போராளிகள், பொது மக்கள் உற்பட 53 பேருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
33 ஆவது தமிழ் தேசிய வீரர்கள் தினமான இன்று 33 சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment