June 9, 2016

அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு!

முன்னாள் ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் 23ம் திகதி வரையில் அனுர சேனாநாயக்கவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாஜூடீன் கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாட்சியங்களை மூடி மறைத்து கொலைச் சம்பவத்தை வாகன விபத்தாக அனுர சேனாநாயக்க பதிவு செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment