September 24, 2015

நியூயோர்க்கிற்கு விரைந்தார் சுமந்திரன் அதிகாரிகளுடன் ஐ.நா.வின் அறிக்­கை ஆலோசனை!

அமெ­ரிக்­காவின் இரா­ஜாங்கத் திணைக்­கள உயர் அதி­கா­ரி­க­ளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழுக்­களின் ஊட­கப்­பேச்­சா­ளரும், இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் வெளி விவ­கா­ரங்­க­ளுக்­கான செய­லா­ளரும்,
யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ர­னுக்­கு­மி­டையில்முக்­கிய கலந்­து­ரை­யா­ட­லொன்று நியூ­யோர்க்கில் இடம்­பெற்­றுள்­ளது.இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் இடம்­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­ட­லின்­போது ஐ.நா.வின் அறிக்­கை­யிலும், குறித்த பிரே­ர­ணை­யிலும் மாற்றம் செய்­யப்­ப­ட­வேண்­டு­மென அர­சாங்­கத்தால் கோரப்­பட்­டுள்ள சொற்­றொ­டர்கள், புதி­தாக இணைக்­கப்­ப­ட­வுள்ள சொற்­றொ­டர்கள் குறித்து அதீத கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.
ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30ஆவது கூட்­டத்­தொடர் நடை­பெற்­று­ வருகின்­றது. இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், மனி­தா­பி­மா­னச்­சட்ட மீறல்கள் குறித்து விசா­ரணை மேற்­கொண்ட ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­ல­கத்தின் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
அதே­நேரம் அர­சாங்­கத்­த­ரப்­பினர் உள்ளுர் விசா­ரணை உட்­பட பல்­வேறு கருத்­துக்­களை உள்­நாட்­டிலும் வெளிநாடுகளிலும் வெ ளியிட்டு வரு­கின்­றனர். அமெ­ரிக்­காவின் உத்­தேச முதல் வரை­பி­னையும் பகி­ரங்­க­மா­கவே நிரா­க­ரித்­த­துடன் ஐ.நா அறிக்கை சர்­வ­தேச நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள், விசா­ர­ண­யா­ளர்­களை உள்­ள­டக்­கிய கலப்பு நீதி­மன்றம் என்ற சிபார்சு உள்­ளிட்ட பல சொற்­றொ­டர்­களை மாற்­றி­ய­மைக்­கு­மாறும் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். இந்­நி­லை­யி­லேயே மேற்­கு­றித்த கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றுள்­ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவாவுக்குச் சென்றிருந்த எம்.ஏ.சுமந்திரன் இக்கலந்துரையாடலுக்காக அங்கிருந்து நியூயோர்க்கிற்குச் விரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment