September 24, 2015

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் (ICET) ஏற்பாட்டில் ஐ.நா. மனிதஉரிமைகள் மன்றத்திற்குள் தமிழர் நீதிக்கான செயற்பாடுகள்!

ஐக்கியநாடுகள் சபையின் 30 ஆவது மனிதஉரிமைகள் கூட்டத்தொடரில் இம்முறை சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலைமற்றும் போர்க்குற்றம் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையும்அதற்கான பரிந்துரைகளும் வெளியிடப்பட்டது.
 இந்தஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விசாரணை முறைகளும் அதன் அர்த்தப்பாடுகளும் இன்னும் சில நாட்களில் வெளிவரும்.சிறீலங்கா அரசானது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட கலப்புவிசாரணை முறையையும் நிராகரித்திருப்பதுடன் அதிலிருந்துதன்னை காத்துக்கொள்வதற்கு பல பிரயத்தனங்களை யெனீவா கூட்டத்தொடரை நோக்கி முன்னெடுத்துள்ளது.

ஆகவே சிறீலங்கா அரசின் முன்னெடுப்புகளை இராஐதந்திர வழியில் முறியடிக்கும் பணிகளில் அனைத்துலக ஈழத்தமிழர்மக்களவையின் செயற்பாட்டளர்கள் மிக முனைப்போடு செயற்பட்டு வருகின்றதுதொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் பலஇராஜதந்திரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி எமது நிலைப்பாட்டைக் கூறிவருகின்றனர்.

அத்துடன் எமது நீதிக்கான போராட்டத்தை வலுவடையச் செய்யும் நோக்கில் ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் மன்றத்திற்குள் இருகருத்தரங்குகளையும் (Side Events) ஏற்பாடுசெய்துள்ளனர்.




30. September 2015 அன்று ஐக்கியநாடுகள் மனிதஉரிமை மன்றத்தின் சிறீலங்கா தொடர்பான அறிக்கையும் தமிழ்ச் சமூகமும்  என்றதலைப்பில் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.


No comments:

Post a Comment