சிறப்பு முகாம் குறித்து உரிய நடவடிக்கை கோரி உண்ணாநிலை இருந்து வரும் செந்தூரன் வேலூர் மருத்துவமனையில் வைத்தியர்களின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது உண்ணாநிலை போராட்டம் ஒருமாதத்தை கடந்து விட்டது . அரசிடமிருந்து எதுவித பதிலும் கிடைக்கவில்லை . மாறாக அவரது குடும்பத்தினரையும் வைத்தியசாலையில் பார்ப்பதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. சென்னை உயர்நீதிமன்ற அனுமதி பெற்றே அவரது குடும்பத்தினர் ஒருமாதத்தின் பின்னர் செந்தூரனை வைத்தியசாலையில் பார்க்க முடிந்தது.
வேலூர் மருத்துவமனையில் செந்தூரனுக்கு வைத்தியம் செய்கின்ற வைத்தியர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது 35 நாட்களாக உணவு எதுவும் உட்கொள்ளாததால் அவரின் உடல் நிலை பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தனர். அத்துடன் அவருக்கு சிறுநீர் வழியாக இரத்தம் வெளியேறுவதால் அவர் உண்ணாநிலையை கைவிடா விட்டால் உயிருக்கே ஆபத்து என்றும் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் களம் சூடு பிடித்துள்ள இந்த நேரத்தில் செந்தூரனது கோரிக்கை குறித்தும் அவரது உடல் நிலை பாதிப்பு குறித்தும் தமிழக தமிழ் உணர்வாளர்கள் எதுவித கருத்தும் தெரிவிக்கவில்லை. புலம்பெயர் தேசத்தில் ஈழத்தமிழர்களுக்காக தங்களையே அர்ப்பணித்து செயற்படுவதாக கூறிக்கொள்ளும் எந்த ஒரு அமைப்பும் செந்தூரனின் உண்ணாநிலை போராட்டத்துக்கு ஆதரவு குரல் கொடுத்ததாக தெரியவில்லை . என்ன செய்ய போகின்றோம் ??????? இது தான் இன்றைய மனித நேயம் ?????
No comments:
Post a Comment