June 9, 2016

வடகிழக்கு இணைப்பு மக்களின் அபிலாசையா? திருமலையில் சிவில் சமூகத்தினருடன் பிரித்தானியதூதுவர் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வட­கிழக்கை இணைக்­கும்­படி கோரு­வது மக்­களின் அபி­லா­ஷை­களின் அடிப்­ப­டை­யிலா என்று இலங்­கைக்­கான பிரித்­தா­னிய தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.


திரு­கோ­ண­ம­லைக்கு நேற்று விஜயம் செய்த தூதுவர் சிவில் அமைப்­புக்­களைச் சந்­திக்கும் நிகழ்ச்சி நிர­லுக்கு அமைய திரு­கோ­ண­மலை சிவில் அமைப்பு மற்றும் திரு­கோ­ண­மலை மாவட்ட தமிழர் அபி­வி­ருத்தி ஒன்­றியம் ஆகிய அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களை எகேட் நிறு­வன மண்­ட­பத்தில் சந்­தித்து உரை­யா­டினார்.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் திரு­கோ­ண­மலை மறை­மா­வட்ட ஆயர் நோயல் இம்­மா­னு வேல், எகேட் ஹரிட்டாஸ் பணிப்­பாளர் வண. ஜி.நித்­தி­தாஸன், வண.உரிய பிர­பா­கரன், ஸ்ரீ.ஞானேஸ்­வரன், தமிழர் அபி­வி­ருத்தி ஒன்­றி­யத்தின் சார்பில் செய­லாளர் பிரகாஸ், அதில்­ லை­யம்­பலம், ஒ.குவேந்­திரன் ஆகியோர் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர்.

இங்கு பிரித்­தா­னியத் தூதுவர், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வட­கி­ழக்கு இணைப்பைக் கோரி­வ­ரு­கின்றது. அதற்­கு­ரிய கார­ணங்கள் எது­வாக இருக்கும் என்று வின­வி­ய­போது சிவில் அமைப்பைப் பிரதிநிதித்­து­வப்­ப­டுத்­துவோர் அதற்­கு­ரிய கார­ணங்­களை வலி­யு­றுத்திக் கூறினார்.

தூதுவர் தொடர்ந்து கருத்­துத்­தெ­ரி­விக்­கையில், இன்­றைய அர­சாங்கம் நாளாந்தப் பிரச்­சி­னை­களை தீர்த்து வரு­கின்­ற­போதும் நல்­லி­ணக்­க­மென்­பது முக்­கி­ய­மா­னது என்­பதை கவ­னத்தில் கொண்­ட­வர்­க­ளாக நாம் இருக்­கின்றோம். அவ­தா­னித்து வரு­கின்றோம்.

ஒவ்­வொரு பிர­தே­சத்துக்கும் சென்று மக்கள் பிர­தி­நி­திகள் மற்றும் புத்­தி­ஜீ­விகள் ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யாடி நல்­லி­ணக்க முன்­னெ­டுப்­புக்கள் பற்றி அவ­தா­னித்து வரு­கின்றோம்.

ஐ.நா. சபையில் கொண்டுவரப்­பட்ட தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் இலங்கை அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்ட இணை உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் நல்­லி­ணக்­கத்­துக்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுத்துச் செல்­லப்­பட வேண்­டு­மென்­பதில் பிரித்­தா­னிய அர­சாங்கம் அவ­தா­னிப்­ப­துடன் கவனம் செலுத்­தியும் வரு­கின்­றது.

வட­கி­ழக்­கி­லுள்ள அதிலும் போருக்­குப்­பிந்­திய நிலை­மை­களை நாம் நன்கு அறிந்து கொண்­டுள்ளோம். மக்­களின் பல்­வேறு பிரச்­சி­னைகள் பற்றி மக்கள் பிர­தி­நி­தி­களின் வாயி­லாக அறியக் கூடி­ய­தா­கவும் உள்­ளது. நல்­லி­ணக்கம், சமா­தானம், சர்­வ­மத ஒன்­று­படல் என்­பன இந்­நாட்டில் ஏற்­ப­ட­ வேண்டும் என்­பது எமது எதிர்­பார்ப்­பாக இருக்­கி­றது.

தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு வட­கி­ழக்கு இணைய வேண்­டு­மென கோரு­கின்­றது. அதற்­கான நியா­யங்­களைக் கூறி­வரும் சூழ்­நி­லையில் யுத்­த­கால சூழ்­நி­லைக்­குப் பின் வட­கி­ழக்கில் மீள் கட்­டு­ மானம், மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் அரசு எவ்­வித முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றது. இவ்­வி­டயம் தொடர்பில் பொறுப்­பு­கூறும் முக­மாக இலங்கை அர­சுக்கு நாம் அழுத்தம் கொடுப்­ப­துடன் உத­வி­பு­ரியும் நோக்­கு­ட­னேயே எமது இன்­றைய விஜயம் அமைந்­துள்­ளது.

எமது பய­ணத்தில் கிளி­நொச்சி, திரு­கோ­ண­மலை குறிப்­பாக சம்பூர் நிலை­மை­களை தீர்க்­க­மாக அவ­தா­னித்து வந்­துள்ளோம். வட அயர்­லாந்து, கம்­போ­டியா, பெரு ஆகிய மூன்று நாடு­க­ளிலும் ஏற்­பட்ட நல்­லி­ணக்கம், சமா­தானம் ஆகி­ய­வற்றை உதா­ர­ணங்­க­ளாகக் கொண்டு இலங்­கை­யிலும் நல்­லி­ணக்­கத்­தையும் சமா­தா­னத்­தையும் உண்டாக்க ஆத­ரவு கொடுப்­ப­துடன் அழுத்தம் தரவும் நாம் முயன்று வரு­கின்றோம்.

குறிப்­பாக, இங்­கி­லாந்தின் அங்­கிலிக்கன் திருச்­ச­பையின் பேராயர் தனது பதவிக் காலத்தில் தூர­நோக்கின் அடிப்­ப­டையில் உலகில் நல்­லி­ணக்­கத்­தையும் சமா­தா­னத்­தையும் கொண்­டு­வர வேண்­டு­மென்று நினைப்­பது போல், சமா­தானத்தை கொண்­டு ­வர முன்­னெ­டுக்கும் நாடு­களில் இலங்­கை­யிலும் அத்­த­கை­ய­தொரு சமா­தா­னத்தைக் கொண்­டு­வ­ர­வேண்­டு­மென பேராயர் விருப்பம் கொண்­டுள்ளார்.

எனவே அவ­ரையும் சந்­தித்து இலங்­கையில் சமா­தா­னத்தை கொண்­டு­வரும் முயற்சி பற்றி ஆலோ­சனை பெற்று இலங்­கையில் கூடி­ய­வி­ரைவில் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை கொண்டுவர அழுத்­தமும் ஆத­ரவும் வழங்க முயற்­சி­களை மேற்­கொள்­வோ­மென பிரித்­தா­னியத் தூதுவர் குறிப்­பிட்­ட­துடன் சிவில் அமைப்­புக்­களின் கோரிக்­கை­க­ளையும் கருத்­துக்களையும் கவ­ன­மாக செவி­ம­டுத்தார்.

சிவில் அமைப்பைச் சார்ந்த ஸ்ரீஞா­னேஸ்­வரன் தூது­வ­ருக்கு அன்­றாட பிரச்­சி­னைகள் பற்றி விளக்கிக் கூறு­கையில், சம்பூர் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட்­ட­போதும் அம்­மக்­களின் அடிப்­படைப் பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­பதில் அரசு மந்­த­க­தியில் செயற்­பட்டு வரு­கின்­றது.

நல்­லி­ணக்­கத்­துக்­கான சூழ்­நி­லை­யொன்று உரு­வா­கி­யி­ருக்கும் நிலையில் அதற்­கான குரலை புதிய அர­சாங்கம் எழுப்ப முடியும். முப்­ப­டை­களின் கைவ­ச­முள்ள தனி­யா­ருக்கும் மற்றும் பொது அமைப்­புக்கள், மத ஸ்தாப­னங்­க­ளுக்கு சொந்­த­மான ஏரா­ள­மான காணிகள் இன்னும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை.

வட­கி­ழக்­கி­லுள்ள காவல்­து­றையைப் பொறுத்­த­வரை தமிழ் மக்­க­ளுக்கு தொடர்ந்தும் பிரச்­சி­னை­யா­கவே இருந்து கொண்­டி­ருக்­கி­றது. சிங்­களக் குடி­யேற்­றங்கள் என்­பது கட்­டுக்­க­டங்­காத வகையில் எல்லை மீறி மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. தொடர்ந்தும் புல­னாய்வுப் பிரி­வி­னரின் அட்­டூ­ழி­யங்கள் இடம்­பெற்­று­வ­ரு­வ­துடன் தமிழ் மக்கள் அச்­சு­றுத்­த­லுக்கு ஆளாக்­கப்­பட்டு வரு­கின்­றார்கள்.

வட­கி­ழக்கில் தொடர்ந்தும் பொருளாதார அச்சுறுத்தல்களுக்கு தமிழ் மக்கள் ஆளாகி வருகின்றார்கள் என்பதற்கு உதாரணந்தான் குச்சவெளி மீனவர் பிரச்சினைகளும் காணி அபகரிப்புக்களுமாகும்.

போருக்குப்பின்னுள்ள நிலைகளில் பாரிய பிரச்சினையாக மாறியிருப்பது வேலையில்லாப் பிரச்சினையாகும். திட்டமிட்ட முறையில் தமிழ் யுவதிகளும் இளைஞர்களும் புறக்கணிக்கப்படுவதுடன் வேறுபாடு காட்டப்படுகிறது.

இன்னுமொரு பாரிய பிரச்சினையாகக் காணப்படுவது புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையாகும் என்று பல்வேறு விடயங்கள் பற்றி தூதுவரி டம் சிவில் அமைப்பினர் எடுத்துக் கூறினர்.

No comments:

Post a Comment