June 10, 2016

போர்க்குற்ற விசாரணை பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் நிராகரிப்பு :அமெரிக்கா கடும் கண்டனம்!

போர்க்குற்ற விசாரணை பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நிராகரித்துள்ளமையை,
அமெரிக்க வெளியுறவுத்துறை காங்கிரஸ் குழு கண்டித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் காங்கிரஸ் குழு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் குழுவினர்,  இலங்கை தொடர்பில் அண்மையில் கலந்துரையாடிய போதே இந்த அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக்குழுவின் தலைவர் மெட் சால்மன் (Matt Salmon) தமது கருத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அமெரிக்காவுடன் இலங்கை கொண்டிருந்த பாதக போக்கு 2015 ஜனவரி 8ஆம் திகதியுடன் மாற்றமடைந்ததாக கருதப்பட்டது. எனினும், வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரித்ததன் மூலம் இலங்கை தொடர்ந்தும் பழைய நிலையிலேயே இருப்பதை உணரமுடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment