June 4, 2016

பேப்பரில் ஒப்பமிடுமாறு வட்டுக்கோட்டைப் பொலிசார் அச்சுறுத்துத்தல்!

வீடு புகுந்து கோடரியினால் வெட்டியவர்களை இனம்காட்டிய போதிலும் அவர்கள் வெட்ட வரவில்லையென பேப்பரில் ஒப்பமிடுமாறு வட்டுக்கோட்டைப் பொலிசார் அச்சுறுத்துவதாக அராலி வடக்கைச் சேர்ந்த த.நடேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரிடமும் அவரது மனைவி ராஜியும் தகவல் தருகையில் ,
ஏப்பிரல் மாதம் 30ம் திகதி அதிகாலை இரண்டு மணியளவில் எமது வீட்டு வளவிற்குள் அத்து மீறி உள்நுளைந்த மூவர் வீட்டினைப் பிரித்து உள்நுளைய முயன்றனர் . அந்த நேரம் நித்திரையில் இருந்த நான் விழித்தெழுந்து திருடன் என நிணைத்து வெளியில் வந்தேன்.
அந்தநேரம் வெளியில் நின்ற மூவரில் ஒருவன் என்மீது கோடரியினால் நெஞ்சில் கொத்திய பின்பு ஓடித் தப்பினான். அந்த மூவரையும் நான் நன்கு இனம் கண்டுகொண்டேன். அவர்களை எனக்கு தெரியும்.
இவ்வாறு கொத்தியவர் மற்றும் அவருடன் கூடப் பயணித்தவர்கள் தொடர்பில் உடனடியாகவே வட்டுக்கோட்டை பொலிசாரிடம் முறையிட்டேன்.
இருப்பினும் இன்றுவரையில் ஒருவரை மட்டுமே கைது செய்த பொலிசார் ஏனைய இருவரையும் தப்பிக்க வைக்கும் நோக்கில் கடந்த இரு நாட்களாக முயல்கின்றனர்.
குறிப்பாக கோடரியினால் நெஞ்சில் கொத்தப்பட்ட நிலையில் இருக்கும் என்னிடம் வந்து ஒருவரை மட்டுமே தெரியும் என ஒப்பமிட்டுத்தருமாறு வற்புறுத்துகின்றனர்.
என்னைக் கொத்தியவனுடன் நான் கடமையாற்றும் பாடசாலையின் அதிபரும் எனது வீட்டுக்குள் வந்த மூவருடன் வந்ததை நான் நன்கு அவதானித்தேன்.
தற்போது அவர் வரவில்லை எனக் கூறுவது எமக்கு பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது . எனவே இதில் உரிய தரப்பினர் தலையிட்டு எனக்கு நீதி கிடைக்க ஆவண செய்யவேண்டும். என்றார்.

No comments:

Post a Comment