June 21, 2016

சாலாவ இராணுவ வெடிப்பு சம்பவத்தின் போது முகாமினுள் இருந்து எடுக்கப்பட்ட காணொளி வெளியாகியது!

அவிசாவளை கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் கடந்த 5 ஆம் திகதி ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தின் போது இராணுவ முகாமினுள் இருந்து எடுக்கப்பட்ட காணொளி தற்போது வெளியாகியுள்ளது.


குறித்த சம்பவத்தின் போது பிரதேச வாசிகள் இராணுவ முகாம் அமைவிடத்திலிருந்து 6 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் செல்லுமாறு பணிக்கப்பட்டிருந்ததோடு ,மின்சாரம் துண்டிக்கப்பட்டு மற்றும் கொழும்பு அவிசாவளை வீதியும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ முகாமிற்கு அருகில் வசித்த 7500 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான 5 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். குறித்த சம்பவத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இவ் வெடிப்பு சம்பவத்தினால் இராணுவ முகாமும் அதை அண்மித்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த குடியிருப்பு கட்டிடங்களும் பலத்த சேதமடைந்தன.

வெடிப்பு சம்பவத்தினால் பாதிப்புக்குள்ளான 51 வீடுகளில் மக்கள் குடியேறியுள்ளதோடு, இராணுவ வீரர்கள் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.








No comments:

Post a Comment