February 3, 2015

நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு!

அமொிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளார்.
இன்று செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

சந்திப்பில்:-
01. ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் மக்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். ஆகையால் தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்ப்பதற்கு புதிய அரசாங்கத்தின் மீது அமொிக்கா அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
02. இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் பாவனையற்றே காணப்படுகின்றன. அக்காணிகள் உடனடியா விடுவிக்கப்பட்டு அப்பகுதியில் மக்கள் மீளக் குடியேற்றப்பட வேண்டும்.
03. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
04. ஜ.நா மனித உரிமை ஆணையகத்தில் விசாரணைகள் எந்தவொரு தங்கு தடையின்றி நடைபெறவேண்டும்.
போன்ற விடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிஷா பிஸ்வாலிடம் வலியுறுத்தியுள்ளார்கள். இக்கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டதுடன் இவ்விடயங்களை அமொிக்கா இலங்கை அரசாங்கத்திடம் தெரிவிக்கும் என நிஷா பிஸ்வால் உறுதியளித்துள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment