சாலாவ இராணுவ முகாமில் தீ பரவியமை காரணமாக, சேதமடைந்துள்ள மின் விநியோக கட்டமைப்பை
இன்றைய தினத்திற்குள் வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
முழுமையாக சேதமடைந்துள்ள வீடுகளைத் தவிர ஏனைய அனைத்து வீடுகளுக்கும் மின்சார விநியோகம் பெற்றுக்கொடுக்கப்படும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.
சேதமடைந்துள்ள மின்சார கட்டமைப்பை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் பிரகாரம் இராணுவ முகாம் ஊடாகவுள்ள மின்சார கட்டமைப்பையும் மறுசீரமைப்பதற்கான உதவிகளை இராணுவத்தினர் வழங்கியதால், மின்சார விநியோகத்தை விரைவாக வழமைக்கு கொண்டுவர முடியும் என்றும் மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நம்பிக்கை தெரிவித்தார்.
கொஸ்கமயில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் வரையான மின்விநியோக கட்டமைப்பை மாத்திரமே தற்போது சீரமைக்க வேண்டியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீயினால் சேதமடைந்துள்ள நீர் விநியோக குழாய்களை புனரமைத்து, மீண்டும் குழாய்நீர் விநியோகத்தை மேற்கொள்வதற்காக குழுவொன்றை நியமித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இராணுவ முகாமை அண்மித்த பகுதிகளிலுள்ள மக்களுக்கு முகாம் வளாகத்திலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் ஊடாகவும், பவுசர்கள் மூலமும் நீர் வழங்கப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
இராணுவ முகாமில் ஏற்பட்ட தீயினால் வெடிப்புக்குள்ளான தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்களின் பாகங்களை அகற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.
பிரதேச மக்கள் பயன்படுத்தும் 392 கிணறுகளை சுத்திரித்து மக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.
இதுதவிர வீடுகளை இழந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment