நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா அல்லது எதிர்த்து வாக்களிப்பதா என்பது
தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாளை செவ்வாய்க்கிழமை முடிவெடுக்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நாளை காலை நாடாளுமன்ற கட்டத் தொகுதியில் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்பின்னரே இந்த விடயம் தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சருக்கு எதிராக பொது எதிரணி என தம்மை கூறிக்கொள்ளும் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது 8 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு எவ்வாறு அமையும் என வினவியபோதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment