போலி விசாக்களை பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு செல்வதற்கு முயன்ற வடக்கைச் சேர்ந்த இளைஞர் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே
இந்த மூவரையும் 11ஆம் திகதி கைது செய்துள்ளதாக விமான நிலையத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் 21, 25 மற்றும் 32 வயது இளைஞர்கள் என்றும் அவ்வதிகாரிகள் தெரிவித்தார்.
இவ்விளைஞர்களில் இருவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டனர் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
நண்பரினால் தயாரித்து கொண்டுக்கப்பட்ட போலியான ஆவணங்கள் மற்றும் விசாவை பயன்படுத்தியே இம்மூவரும் பிரித்தானியாவுக்கு செல்வதற்கு முயன்றதாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment