March 12, 2015

கிழக்கை ஆளவேண்டியது அவர்களே! பிள்ளையான்!!

இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்காக போராடி உயிரையும் விட்டவர்கள் தமிழர்களே என்று தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான பிள்ளையான் எனப் படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கை ஆளவேண்டியதும் தமிழர்கள் என்றே குறிப்பிடுகிறார். 


மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கிழக்கு மாகாண சபை தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களுக்கு உரியது என்றாலும் நாட்டில் அதிகாரப் பகிர்வு ஒன்று தேவை என தமிழர்களே போராடியதாகவும் அதற்கான பலன் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதேவேளை தனியாகன அமைச்சப் பதவி ஒன்றை பெற்றிருப்பதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்த பிள்ளையான் முதலமைச்சருக்கு என்ன அதிகாரம்? தனியான அமைச்சருக்கு என்ன அதிகாரம் என்பதை தான் நன்கு அறிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

எதையும் செய்ய முடியாத அமைச்சப் பதவியை கூட்டமைப்பு ஏற்றுள்ளதாக குற்றம் சுமத்திய பிள்ளையான் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி செய்வதற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள சில எம்பிக்கள் தடையாக இருந்ததாகவும் கூறினார்.

எதிர்காலத்தில் தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு அவர்களின் ஆசனங்களை பறிக்க்ககூடும் என்ற அச்சத்திலேயே அவர்கள் இவ்வாறு மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். 

தான் அமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பை நாடவில்லை என்றும் தான் நினைத்திருந்தால் மகிந்த ராஜபக்ச காலத்தில் இரண்டு கிழக்கு மாகாண ஆட்சியில் அமைச்சுப் பதவியை பெற்றிருக்கலாம் என்றும் கூறியதுடன் தமிழ் மக்களுக்கு முதலமைச்சுப் பதவி கிடைக்க வேண்டும் என்றே கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க முயற்சித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment