தாயகத்தில் உள்ள மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக ஜேர்மன் கைல்புறோன் கந்தசாமி கோவில் பல உதவிகளை வழங்கி வருகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைகாரணமாக பாடசாலைக் கல்வியை தொடரமுடியாமல் உள்ள மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள், பாடசாலைகளுக்கு
செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் என்பனவற்றை கைல்புறோன் கந்தசாமி கோவில் வழங்கிவருகின்றது. பாடசாலை செல்வதற்கு இலகுவாக வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் மாணவனுக்கு துவிச்சக்கர வண்டியை வழங்கியுள்ளனர். இதற்கான நிதி உதவியினை அஞ்சலி யோன் தனதுபிறந்த நாளை முன்னிட்டு கைல்புறோன் கந்தசாமி கோவில் ஊடாக வழங்கியுள்ளார். வலிவடக்குப் பிரதேச சபையின் முன்னாள் துணைத்தவிசாளர் ச.சஜீவன் அவர்கள் ஊடாக குறித்த மாணவனுக்கு வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment