மீனாவின் கண்கள் அங்கு வரிசையாக அழகாக தொங்கவிடப்பட்டிருந்த ஆடைகளில் நின்று நிலைத்தது . ஒரு பக்கம் உடைகளும் மற்றய பக்கத்தில் ஜீன்ஸ் டாப்களும், அருகேயே ஜீன்ஸ்கள் என்று மிக நேர்த்தியாகவும் ஒரு ஒழுங்குடன் அந்த பிரபல மார்க்ஸ் அன் ஸ்பென்செர் ஆடை அங்காடியில் கடைக்கு வருபவர்களை கவரும் விதமாக அழகாக வரிசைபடுத்தி விற்பனைக்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்தது . .
அவள் கண்கள் ஒரு சிவப்பு நிற ஆடையில் ஒரு சில நிமிடங்கள் இளைப்பாறியது. மிக அழகான அவளுக்கு பிடித்தமான சிவப்பு நிற ஆடை அது . அதுவும் பல சின்ன சின்ன பூக்கள் இடையிடையே தெரிகிற மாதிரி சித்திரவேலை செய்யப்பட்டும் இருந்தது . மீனாவுக்கு அந்த உடை மிகவும் பிடித்துக் கொண்டது.
கையில் வைத்திருந்த பையை பார்த்தாள். சின்னவள் மிதுவின் பிறந்தநாளுக்கு சட்டை வாங்கியாச்சு . மூத்தவள் மனம் வருந்தக்கூடாது என்று அவளுக்கும் ஒரு அழகான டாப் வாங்கியிருந்தாள். இவள் இன்று உடுப்புகள் கடைப்பக்கம் வந்ததே சின்னவளின் 7வது பிறந்தநாளுக்கு புது சட்டை வாங்குவதற்கே. வந்த வேலை முடிந்து விட்டது . ஆனாலும் ஒரு ஆர்வத்தின் நிமித்தமே பெண்களின் ஆடைகள் விற்பனை பக்கம் வந்தவள் அங்கு இருந்த அந்த சிவப்பு உடையில் மனதை பறிகொடுத்து தயங்கிக் கொண்டு நின்றாள் .
நீண்ட காலமாக தனக்கென்று அவள் ஒன்றுமே வாங்கியதில்லை . ஆனால் ஒரு சிலமாதங்கள் முன் வரை தன்னை அழகாக அலங்காரம் செய்வது அவளுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று . ஆனால் இப்பொழுதெல்லாம் தன்னை ஒரு முறை தலையை வாருகையில் கண்ணாடியில் பார்ப்பதோடு சரி . மீனா பொதுவாக ஒரு அழகி தான் . அத்துடன் மிகவும் கவனமாக தன்னை அலங்கரித்தும் கொள்பவள். வீதியில் போவோர் கூட இவளை ஒருமுறைக்கு இருமுறை திரும்பிப்பார்த்து விட்டு தான் செல்வார்கள் .
ஆனால் இவளின் விவாகரத்துக்கு பின்னர் தன் இரு செல்வங்களை கவனிப்பதில் தன் முழுகவனத்தையும் செலுத்துவதனால் தன் தோற்றத்தில் கொண்டிருந்த அக்கறையை விட்டு விட்டாள் . தன் கணவன் கொடுத்த ஏமாற்றத்தை அவளால் இன்னமும் ஜீரணித்துக்கொள்ள முடியாமல் திண்டாடுவதும் ஒரு காரணமே .
தொடரும்
மீரா , ஜெர்மனி
தொடரும்
மீரா , ஜெர்மனி
No comments:
Post a Comment