மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கு அருகில் உள்ள இராணுவச் சோதணைச் சாவடி விரைவில் காங்கேசன்துறை வரைக்கும் நகர்த்தப்படும்
என இராணுவம் உறுதியளித்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்.நடேஸ்வரக் கல்லூரி இயங்குவதற்கான அனுமதியளிக்கப்பட்டுள்ள போதும் அக் கல்லூரிக்கு சென்றுவரும் மாணவர்கள் , ஆசிரியர்கள் அதிகரிகள் என அனைவரும் சோதனைச் சாவடியை தாண்டியே சென்று வரும் நிலயையே இன்றுவரை உள்ளது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரி விடிவிப்பது தொடர்பான உத்தரவாதம் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அதற்கான இயல்பான போக்குவரத்து தொடர்பிலும் எம்மால் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது.
அந்தக் கலந்துரையாடலின் போது உரிய இடத்தில் கல்லூரி இயங்க ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் உடன் சோதணைச் சாவடி பின் நகர்த்தப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டது.
இதன்பிரகாரம் கடந்த 2ம் திகதி பாடசாலைகள் இரண்டும் உரிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மாணவர்களின் போக்குவரத்திற்கு குறிப்பிட்ட சிற்றூர்த்தியே பயன்படுத்தப்படுவதனால் மாணவர்கள் ஒரே நேரத்தில் வர வேண்டியநிலமைஉள்ளதால் உள்ள இடையூறுகள் உள்ளிட்ட பல விடயங்கள் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்காரணத்தினால் முன்னர் வழங்கப்பட்ட உறுதி மொழிக்கமைய உடன் தொடர்பு கொண்டு மாவிட்டபுரம் பகுதியில் உள்ள இராணுவ தடை அகற்ற ஏற்ற ஒழுங்குகள் இடம்பெறுகின்றன. இதன் பிரகாரம் குறித்த தடை விரைவில் அகற்றப்பட்டு கல்லூரி வரையான பிரதேசத்தின் இயல்பு போக்குவரத்து உறுதி செய்யப்படும்என்றார்.

No comments:
Post a Comment