தமிழ் மக்களுடைய முக்கிய பிரச்சினைகள் பலவற்றிற்கு இதுவரை தீர்வு எதுவும் வழங்கப்படாத நிலையில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் என்ன மனநிலையில் செயற்பட்டு வருகிறார் எனச் சாடிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அரசாங்கம் தனது கணிப்பின்படி எல்லாம் செய்யும் என சம்பந்தன் நம்புவதாலேயே 2016க்குள் தீர்வு என குறிப்பிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று அரசியலமைப்பு மக்கள் கருத்தறியும் குழுவின் முன்மொழிவுகள் குறித்து ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை அவர் நடத்தியிருந்தார். இதன்போதே, சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண சபையும் தமிழ் மக்கள் பேரவையும் தயாரித்த தீர்வுத் திட்டம் மக்கள் கருத்தறியும் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கின்றது.
இறைமை இருக்கின்றது என அந்த தீர்வுத் திட்டத்தில் மொழிவாரி மாநிலம் மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டத்தின் படி சுயாட்சி உருவாக்கப்பட வேண்டு மென்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மக்கள் கருத்தறியும் குழுவினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தில் தமிழ் மக்கள் ‘தேசிய இனம்’ என்ற வார்த்தைப் பிரயோகம் இல்லை. மாறாக தமிழ் மக்கள் சிறுபான்மை இனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த குழு தமிழ் மக்கள் தேசிய இனம் அல்ல என்று யோசிக்கின்றார்கள் போல இரு க்கின்றது. அந்த அறிக்கையில் சிறுபான்மை இனம், அந்த இனத்திற்கு நாங்கள் கொடுப்பதைக் பெற்றுக்கொண்டு போக வேண்டுமென்ற வகையில் அறிக்கை காணப்படுகின்றது.
தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு முன்னரே இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. சிங்கள வரலாற்றாசிரியர்களும் அவற்றினை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
ஆனால், மக்கள் கருத்தறியும் குழு வின் அறிக்கையில், ஏற்கனவே, அரசியல் சாசனத்தில் உள்ளவாறு வடகிழக்கு இணைக்கப்பட்ட அந்த குறிப்பினையும் எடுக்க வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அந்தவகையில், வடகிழக்கு இணைப்பினை முற்றாக எதிர்த்திருக்கின்றார்கள் என்றே பார்க்க வேண்டும். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை குறித்து காத்திரமான எந்த கருத்துக்களும் சொல்லப்படவில்லை.
தமிழ் தேசி யக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை வைத்தே வடமாகாண சபையும், தமிழ் மக்கள் பேரவையும் தீர்வுத்திட்டத்தினை தயாரித்தார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலை மைத்துவம் மக்கள் கருத்தறியும் குழுவின் கருத்துக் குறித்து எந்தவித எதிர்ப்புக்களையும், கருத்துக்களையும் கூறவில்லை.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைப் பார்க்கும் போது, தமிழ் மக்க ளின் இனப்பிரச்சினைக்கு தீர்வு இது அல்ல என்ற கருத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் ஏன் இன்றும்; கூற வில்லை என்ற கேள்வியும் எழுகி ன்றது.
எனவே, மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையில் சிங்கள மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான முன்மொழிவுகளாக இருக்கின்றதே தவிர, தமிழ் மக்க ளின் விருப்பங்களை நிறைவேற்றுவ தற்கான முன்மொழிவுகளாக இருக்கவில்லை.
திரு சந்திரகாசனின் மகன் இளங்கோ மற்றும் பேராசிரியர் செல்வகுமாரன் ஆகியோர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக இருவர் அக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
எனினும் முழுமையான அதிகார பகிர்வு என்ற விடயத்தில் சமஷ்டி அமைப்பு முறை என்ற வடிவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நியமிக்கப்பட்டவர்கள் உறுதி யானவர்களாக இருந்தார்களா என்ற கேள்வி யும் எழுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக நியமிக்கப்பட்டவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களை முன் வைத்தார்களா? அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது முன்மொழிவுகளை இருவருக்கும் தெளிவுபடுத்தி நியமித்தார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக் கூட்டம் என்பது நீண்டகாலமாக கூட்டப்படவில்லை. தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்படவில்லை. தேசிய ரீதியில் தமிழ் மக்களுடைய பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லை.
இந்த சூழ் நிலையில் என்ன மனநிலையில் த.தே. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் செயற்பட்டு வருகிறார்? அரசாங்கம் எல்லாம் செய்யும் என அவர் நம்பிக் கொண்டிருப்பதா லேயே 2016க்குள் தீர்வு என சம்பந்தன் தனது கணிப்பை தெரிவித்து வருகிறார்.
அப்படியாயின் அரசாங்கம் தமிழ் மக்களுக்காக இதுவரை ஆக்கபூர்வமாக எதைச் செய்தது என்பதை அடுத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் மக்களுக்கு சம்பந்தன் வெளிப்படுத்த வேண்டும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.
அத்தோடு விடுவிக்கப்படுகின்ற காணிகளில் பெரும்பாலானவை முன்னைய அரசாங்கம் விடுவிப்பதாக தீர்மானிக்கப்பட்ட காணிகளேயாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:
Post a Comment