இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாம் போராட்டங்களை கைவிடப்போவதில்லை என ஒன்றாரியோ கட்சியின் தலைவர் பற்றிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று கனடாவில் நினைவு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்துரைக்கையில்,
இலங்கையில் பல்லாண்டுகளாக நீடித்துவந்த போர் முடிவுக்கு வந்து 7 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுகோர நாம் ஒன்று கூடி உள்ளோம்.
அந்த யுத்தத்தால் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். மட்டுமின்றி இலட்சக்கணக்கான குடும்பங்களும் பிரிந்து சென்றுள்ளன.
முள்ளிவாய்க்கால் மோதல் முடிவுக்கு வந்து இது 7-வது ஆண்டு, இங்குதான் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற எத்தனித்தபோது இராணுவத்தினரால் தாக்கப்பட்டனர்.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சிறப்பு குழுவினரின் கணிப்புகள்படி பாதுகாப்பு பகுதியில் இராணுவத்தினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
நடத்தப்பட்ட இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என்பது வருந்தத்தக்கதே.
கனடாவில் உள்ள தமிழ் சமூகம் மற்றும் உலகின் அனைத்துப்பகுதியில் உள்ள உறவுகளும் தங்களின் இழந்த சொந்தங்களை நினைவு கூற ஒன்று கூடியுள்ளனர்.
இது நமக்கு அமைந்துள்ள வாய்ப்பாகும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைக்கும் மட்டும் நம் போராட்டங்களை கைவிடப்போவதில்லை என்றார்.
No comments:
Post a Comment