காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட குளிர்ச்சியைப் போக்க, தீயை மூட்டி உறங்கிய முதியவர் ஒருவர், அந்த தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவிக்கையில், ‘நேற்று (வியாழக்கிழமை) பெய்த மழையினால் ஏற்பட்ட கடும் குளிரைத் தணிப்பதற்காக, நபரெருவர் தீயை மூட்டிவைத்து உறங்கச்சென்றுள்ளார்.
இவ்வாறு மூட்டப்பட்ட தீயானது, அவர் உறங்கிக்கொண்டிருந்த கட்டிலில் பற்றி எரிந்துள்ளதையடுத்து அவர், பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார்’ என்று குறிப்பிட்டனர்.
இந்த சம்பவத்தில் 77 வயதுடைய முதியவர் ஒருவரே பலியாகியுள்ளதாக குறிப்பிடும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment