கிளிநொச்சி உமையாளர்புரம், திருவையாறு ஆகிய பகுதிகளில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிச் சென்ற மூவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, உமையாளர்புரம், பகுதியில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி டிப்பர் வாகனத்தில் மணல் கொண்டு சென்ற சாரதிகள் இருவரையும் கைது செய்த கிளிநொச்சிப் பொலிஸார் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது, குறித்த இரு டிப்பர் வாகன சாரதிகளுக்கும் தலா நாற்பதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை திருவையாறு பகுதியில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் சென்ற ஒருவருக்கு இருபதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கிளிநொச்சி பகுதியில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிய மூவருக்கு மொத்தமாக ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment